10553 சிறகு விரிக்கையில்: கைகொடுத்து வரவேற்றோருக்கு கண்ணீருடன் பிரியாவிடை.

பதினாறாம் அணியினர். யாழ்ப்பாணம்: விவசாய பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, மே 2007. (அச்சக விபரம் தரப்படவில்லை).

37 பக்கம், ஓவியங்கள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் பதினாறாம் அணியினர், முன்னைய அணியினர் தமது பயிற்சிகளை முடித்து வெளியேறும் வேளை தமது மலரும் நினைவுகளைக் கவிதைவரியில் உணர்வுச் சிதறல்களாக்கி இந்நூலை வெளியிட்டுள்ளனர். மேலும் குறித்த அணியினரின் பெயர் முகவரி, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி இலக்கம், பிறந்த திகதி என்பவற்றையும் இந்நூலில் பதிவுசெய்து பல்கலைக்கழக வாழ்க்கையின் பின்னருமான தமது அணியினரின் தொடர்புகளைப் பேணிக்கொள்ள வகைசெய்துள்ளனர். நூலின் பக்கம் தோறும் பிரிவுத்துயர் அங்கதச் சுவையுடன் பேணப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்