என்.சுந்தா. மட்டக்களப்பு: என்.சுந்தரராஜன், விவசாய பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம், வந்தாறுமூலை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2001. (அச்சக விபரம் தரப்படவில்லை).
24 பக்கம், விலை: ரூபா 37., அளவு: 21×14 சமீ., ISBN: 955- 97603-0-0.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விவசாயபீட இறுதியாண்டு மாணவனான சுந்தா, வந்தாறுமூலை பெரியதம்பிரான் கோவில் வீதியைச் சேர்ந்தவர். இலங்கையில் சக்தி எப் எம். முத்துக்கள் வானொலி நிகழ்ச்சிக்கென தான் எழுதி வழங்கிய 85க்கும் அதிகமான கவிதைகளின் தேர்ந்த சிலவற்றின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. காதலர் தினத்திற்காக வெளியிடப்பட்ட நூல் என்ற வகையில் காதல் கவிதைகளே தூக்கலாகக் காணப்படுகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28063).