சோ.பத்மநாதன். யாழ்ப்பாணம்: சோ.பத்மநாதன், ஏரகம், பொற்பதி வீதி, கொக்குவில், 1வது பதிப்பு, ஆனி 2010. (யாழ்ப்பாணம்: நோபிள் பிரின்டர்ஸ், பருத்தித்துறை வீதி, நல்லூர்).
iv, 76 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 180., அளவு: 17×12 சமீ., ISBN: 978-955-52603-0-5.
‘சோ.ப.’ எனப் பலராலும் அழைக்கப்படும் இக்கவிஞரின் முன்னைய கவிதைத் தொகுதியான நினைவுச்சுவடுகளின் (2005) தொடர்ச்சியாக இக்கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. அதனால் இத்தொகுதிக்கு சுவட்டெச்சம் எனப்பெயரிட்டுள்ளார். நினைவுச் சுவடுகளுக்கு வாசகர்கள் எழுதிய விமர்சனக் கடிதங்களின் சில பகுதிகள் இத்தொகுதியின் பின்னிணைப்பில் தரப்பட்டுள்ளன. சோ.ப. கவிஞராக, விமர்சகராக, மொழிபெயர்ப்பாளராக, பேச்சாளராக, ஈழத்துத் தமிழ்ப் படைப்புலகச் சூழலில் பெரிதும் பேசப்படுபவர். வடக்கிருத்தல்(1998), நினைவுச் சுவடுகள் (2005) ஆகிய கவிதைத் தொகுதிகள் இரண்டை முன்னதாக வெளியிட்டவர். ஆபிரிக்கக் கவிதைகள் (2001), தென்னிலங்கைக் கவிதை (2003) ஆகியவை இவரது மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுப்புகளாகும். பிரபல ஈழத்து அரங்கியலாளர் குழந்தை சண்முகலிங்கத்தின் மூன்று நாடகங்களை ஆங்கிலத்தில் 2007இல் மொழிபெயர்த்தவர். Journal of South Asian Literature (1987), Penguin New Writing in Sri Lanka (1992), Lutesong and Lament (2001), A Lankan Mosaic (2002)ஆகிய ஆங்கிலக் கவிதைத் தொகுதிகளில் இவரது மொழிபெயர்ப்புக் கவிதைகள் பல வெளிவந்துள்ளன. சோ.ப.வின் இசைப்பாத் தொகுதிகள் நல்லூர் முருகன் காவடிச் சிந்து (1986), முத்துச் சிரிப்பு (2005) ஆகிய தலைப்புகளில் ஒலிப்பேழைகளாகவும் வெளிவந்துள்ளன.