10560 செங்கமலம்.

ஆ.மு.சி.வேலழகன். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், 64 கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, 2010. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).

103 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×15 சமீ., ISBN: 955-8715-67-3.

இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் சாரதியாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற கவிஞர் ஆ.மு.சி.வேலழகன், மட்டக்களப்பு திருப்பழுகாமத்தைச் சேர்ந்தவர். 1960ம் ஆண்டு முதல் எழுதிவருவதுடன், 18 நூல்களுக்கு மேல் படைத்துள்ள பன்னூலாசிரியரான இவரது மரபுக்கவிதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. ஓசையும், ஒத்திசையும் கருத்தும், கருத்தைக் கவரும் பாங்கும், சொல்லும் முறையும், படிப்போர் உள்ளத்தை வெல்லும் திறனும் ஒருங்குசேர்ந்து இக்கவிதைகள் மணம்வீசுகின்றன. இத்தொகுப்பில் சுவைத்தேன், ஐக்கியம் விதைத்த அண்ணல், நானிலம் சிறக்கவந்த நபிமணி, புலவர்மணி வள்ளுவம் சொல்லே வேதம், தாய் வேண்டும், விஞ்ஞானத் தமிழ் தடங்கள் போன்ற சில அரங்கக் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. 61ஆவது  பிரியா பிரசுரமாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்