10561 செடி விட்ட வேர்கள்.

கம்மல்துறை எம்.றிஸ்வான். கொச்சிக்கடை: கம்மல்துறை எம்.றிஸ்வான், 470/2, தக்கியா வீதி, தழுவகொட்டுவ, 1வது பதிப்பு, நவம்பர் 2000. (நீர்கொழும்பு: DMCS கணனி நிலையம், 137/2/1, பள்ளி வீதி, பெரியமுல்லை).

87 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20×14 சமீ.

நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் பழைய மாணவரான வளரும் படைப்பாளி எம்.றிஸ்வான் எழுதிய முதலாவது கவிதைத் தொகுதி இதுவாகும். கவியாகி நான், மாருத மாலை, பௌர்ணமி நிலவு, உனக்காக எல்லாம், அன்பிற்கு அஞ்சலி, அங்கீகாரமா? நன்றிப் பெருக்கு, யார் நீங்கள், பரிணாமம், கருகி விழும் சருகுகள், நீ, தீவிரவாதி, நனைந்தது மனம், யார்? யார்? யாரோ?, உயரம், சில துளிகள், இரவின் மடியில், பிராயச்சித்தம், தூரம், தீர்வுகளே தீர்வல்ல, ஆருயிரே ஆராதி, என்னவளே, புஷ்பங்கள் பூக்கட்டும், ரசிக்கவிடு, மன்றாட்டம், உலகே உனக்கு கண்ணில்லையா? ஆகிய தலைப்புகளில் அமைந்த 26 கவிதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

11060 மரணம்-இழப்பு-மலர்தல்: இழப்பிலிருந்து வளர்ச்சியை நோக்கி ஒரு பயணம்.

மீராபாரதி. கனடா: பிரக்ஞை வெளியீடு, 80, டக்ளஸ் ஹேய்க் டிரைவ், மார்க்கம் L3S 2E1,  1வது பதிப்பு, மே 2013. (தெகிவளை: தியாகு கேசவன், டெக்னொ பிரின்ட்). 168 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: