அகளங்கன் (இயற்பெயர்: நா.தர்மராஜா). யாழ்ப்பாணம்: தமிழ்மன்றம். இலங்கைப் பல்கலைக்கழகம்,யாழ்ப்பாண வளாகம், 1வது பதிப்பு, டிசம்பர் 1977. (யாழ்ப்பாணம்: மொமர்ஷியல் அச்சகம்).
10 பக்கம், விலை: சதம் 50., அளவு: 14.5×11.5 சமீ.
தந்தை செல்வாவின் மரணத்தையொட்டி 17.12.1977 அன்று வெளியிடப்பெற்ற அஞ்சலிக் கவிதைகள். நா.தர்மராஜா இலங்கைப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மாணவராக இருந்த வேளையில் தமிழ் மன்றத் தலைவராகவும், ஈழத்தமிழ் மாணவர் மன்றத் தலைவராகவும் செயற்பட்டவர். தந்தை செல்வநாயகம் அவர்களது மறைவையொட்டி அவர் எழுதி வெளியிட்ட அஞ்சலிக் கவிதையும், தந்தை செல்வாவின் இறுதி ஊர்வலத்தின்போது வெளியிடப்பட்ட அஞ்சலிக் கவிதைகளும், பிரசுரமாகாமல் இறுதி ஊர்வலத்தின்போது, உடனுக்குடன் எழுதப்பட்டு ஒலிபெருக்கிமூலம் உடனுக்குடன் படிக்கப்பட்ட அஞ்சலிக் கவிதைகளும் இச்சிறு நூலில் இடம்பெற்றுள்ளன.