பூபாலசிங்கம் பிரதீபன். திருக்கோணமலை: மகரந்தம் வெளியீட்டகம், 1வது பதிப்பு, 2013. (திருக்கோணமலை: எஸ்.எஸ். டிஜிட்டல்ஸ்).
xi, 96 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 24×16.5 சமீ., ISBN: 978-955-44528-0-0.
பூபாலசிங்கம் பிரதீபன் மும்மொழித் திறமைபெற்ற ஒரு கலைஞன். பிரபல சிங்களத் திரைப்பட நடிகையாக இருந்த திருமதி அனோஜா வீரசிங்க அவர்களுடைய ‘அபின’ கலைக் கல்லூரியின் மூத்த வளவாளரும், அரங்கியல் ஆற்றுகைக்கான மும்மொழிக் கலைஞனும், சர்வதேச யோகக் கலைபட்டப் பயிற்சிபெற்ற பயிற்றுவிப்பாளருமாக பல்பரிமாணங்களில் இயங்கி வருகிறர். அவரது சிந்தனையில் உதித்த கவிதைகளுக்கு நூல்வடிவம் தந்துள்ளார். இத்தொகுப்பில் இவரது 50 கவிதைகள் இடம்பெற்றுள்ளன.