முல்லை முஸ்ரிபா (இயற்பெயர்: முஹம்மது முஸ்தபா மஃ ஸூர்). கொழும்பு 10: வெள்ளாப்பு வெளி, 391 டீ, பறகத் மஹால், ஜயந்த வீரசேகர மாவத்தை, , 1வது பதிப்பு, ஜுன் 2014. (கொழும்பு: சிசர பிரின்ட் வே).
xii, 108 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 18.5×12.5 சமீ., ISBN: 978-955- 0280-03-2.
வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை, மற்றும் இளைஞர் விவகார அமைச்சு 24.10.2015இல் கிளிநொச்சியில் நடாத்திய வடக்கு மாகாண இலக்கியப் பெருவிழாவில் 2014இல் வடக்கு மாகாணத்தில் வெளிவந்த சிறந்த புதுக்கவிதை நூலுக்கான பரிசை வென்ற நூல். முள்ளியவளை, கணுக்கேணி மேற்கு, தண்ணீரூற்றை பிறப்பிடமாகக்கொண்ட கவிஞர் முல்லை முஸ்ரிபா கல்வித்துறையில் பணியாற்றி வருகிறார். (இந்நூல் கொழும்புப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 68175).