டீன் கபூர். (இயற்பெயர்: அப்துல் கபூர் றபீஉத்தீன்). மருதமுனை 6: புதுப் புனைவு இலக்கிய வட்டம், 362 A/3, ஹாஜியார் வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2007. (அக்கரைப்பற்று: நியூ செலெக்ஷன்).
xii, 52 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-50072-0-7.
1999-2005 காலப்பகுதியில் எழுதப்பட்டு திண்ணை இணையத் தளத்தில் வெளியான தனது கவிதைகளில் தேர்ந்த 25 கவிதைகளை இத்தொகுப்பில் உள்ளடக்கியுள்ளார். சமுதாய அவலங்களைச் சாடி, தேர்தல்கால நையாண்டி செய்யும் பல கவிதைகளுள் யுத்த வெறுப்பு, சமாதானத்திற்கான ஏக்கம் என்பன உள்ளடங்குகின்றன. சிறிய சம்பவங்களுக்கூடாக பெரும் சமூகப் பரப்பினைச் சுட்டிக்காட்டுகின்ற அனுபவக் கூர்மையையும் சம்பவங்களுக்கு முக்காடிடாமல் வெளிப்படையாகக் கூறுகின்ற மொழிச் சாதுர்யவாண்மையும் இக்கவிதைகளில் இனம்காண முடிகிறது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 45407).