கீ.பீ.நிதுன் (இயற்பெயர்: கீதபொன்கலன் பீற் நிஜாகரன்). முல்லைத்தீவு: கீ.பீ.நிதுன், மணற்குடியிருப்பு, 1வது பதிப்பு, மாசி 2011. (யாழ்ப்பாணம்: நோபிள் பிரின்டர்ஸ், இல. 817, ஆஸ்பத்திரி வீதி).
(14), 63 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 17.5×12 சமீ.
யுத்தம் தின்ற நிலத்தில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருபவர் நிதுன். ஈழப்போரின் இறுதியில் வன்னிமக்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் துயராகப் படிந்த கடல் ஒன்றின் வார்த்தைகளாகத் தன் கவிதைகளை இந்நூலில் வெளிப்படுத்தியிருக்கிறார். எண்ணற்ற உயிர்களையும் வாழும் நம்பிக்கைகளையும் யுத்தம் நந்திக் கடலில் தான் இறுதியாகக் கரைத்தது. தன் நிலம்பெயர்ந்த நினைவுகளையும் கொலைக்காட்சிகளையும் சனங்கள் பெற்ற இறுதித் தோல்விகளையும் தன் கவிதைகளில் எதிரொலிக்கிறார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொதுக் கலைமாணிப் பட்டத்தினைப்பெற்ற இவர் முல்லைத்தீவு மாவட்ட கரைதுறைப்பற்று உதவி அரசாங்க அதிபர் அலுவலகத்தில் தற்காலிக மீள்குடியேற்ற அலுவலராகப் பணிபுரிகின்றார். 2007இல் இருந்து கவிதைகள் எழுதிவரும் இவரது முதலாவது கவிதைத் தொகுதி இதுவாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 53459).