அ.கோபிகா (இயற்பெயர்: கோபிகா அருளானந்தன்). வவுனியா: கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், 1வது பதிப்பு, 2014. (வவுனியா: சுபாஸ் அச்சகம், இல. 214, புகையிரத நிலைய வீதி).
xiv, 74 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 17.5×11.5 சமீ., ISBN: 978-955-42018-0-4.
வவுனியா பண்டாரிக்குளத்தைச் சேர்ந்த செல்வி கோபிகா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக நூலக உதவியாளராகப் பணியாற்றுபவர். வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவியாகக் கல்வி கற்ற காலத்திலேயே கவிதைத்துறையில் கோபிகா ஈடுபாடு கொண்டிருந்தார். இவ்விளம் கவிஞரின் முதலாவது நூலாக 21 கவிதைகளைக் கொண்ட இப்புதுக்கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. உறவுகளைவிட நட்பைப் பெரிதும் பாராட்டும் பண்பும், சாமான்யனின் விரக்தி மனோபாவமும் இவரது கவிதைகளில் காணப்படுகின்றன.