10575 தெருப் புலவர் சுவர்க்கவிகள்.

காசி ஆனந்தன். கொழும்பு 12: சுதந்திரன் வெளியீட்டகம், 194ஏ,பண்டாரநாயக்க வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1975. (கொழும்பு 12: சுதந்திரன் அச்சகம்;, 194ஏ,பண்டாரநாயக்க வீதி).

(2), 28 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 1.00, அளவு: 17.5×12 சமீ.

இரண்டரை ஆண்டு சிறைவாசத்தின்பின்  விடுதலையாகிய கவிஞர் காசி ஆனந்தனின் புதியதொரு அரசியற் கவிதைப் புனைவு இது. தனது கற்பனைப் பாத்திரமான தெருப்புலவர், சுவரில் கரித்துண்டுகளால் எழுதிய நையாண்டிக் கவி வரிகள் இவை. உதாரணத்திற்கு ஒன்று:  ‘அனுபவம்’ என்ற தலைப்பின்கீழ்  எழுதப்பட்ட சுவர்க் கவிதை இது. ‘ஆச்சி சொன்னாள்/ அரசாங்கக் கட்சிக்கிளை/ வைப்பதைவிட/ நாலு முருங்கைக் கிளை வை/ காய்க்கும்/ குழம்பு வைக்கலாம். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 77219).     

ஏனைய பதிவுகள்

17609 சத்திய வேள்வி: நாடகத் தொகுப்பு.

சி.வ. ஏழுமலைப்பிள்ளை. கிளிநொச்சி: வல்லிபுரம் ஏழுமலைப்பிள்ளை, வேந்தன் வெளியீடு, 11/01, மலையாளபுரம் தெற்கு, 1வது பதிப்பு ஓகஸ்ட் 2018. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி). viii, 80 பக்கம், விலை: ரூபா 300., அளவு:

10405 முக்கிய சினிமாக்கள் பற்றிய சுவையான கண்ணோட்டம்.

கே.எஸ்.சிவகுமாரன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2014. (சென்னை 24: ஆதிலட்சுமி பிரிண்டர்ஸ்). iv, 136 பக்கம், விலை:

11241 பிரபந்தமாலை: ஆய்வரங்கச் சிறப்புமலர்-2016.

க.இரகுபரன், தேவகுமாரி ஹரன் (பதிப்பாசிரியர்கள்). கொழும்பு 4: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1 காலி வீதி, 1வது பதிப்பு, 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை). x, 119 பக்கம், விலை: