ம.நர்மதன், ந.சுதன். மானிப்பாய்: காயமுற்ற போராளிகள் பயிற்சிக் கல்லூரி, சுதுமலை, 1வது பதிப்பு, வைகாசி 1994. (யாழ்ப்பாணம்: அந்திவானம் பதிப்பகம்).
v, 18 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
சுதுமலை காயமுற்ற போராளிகள் பயிற்சிக் கல்லூரியின் மாணவர்களான இரு விடுதலைப் போராளிகளின் கவிதைத் தொகுப்பு. எங்கள் தலைவர், காதலிக்கிறேன், எலெக்சனாம், உணர்ந்தான், இந்த மண்ணில், உறுதி, உதித்தான், நட்பு, நண்பனே, ரணகளம், கொடியோர் கூட்டம் ஓடுதடா, நான், உன்னை வெல்வது யார் மகனே, தமிழீழம் ஒரு தனியரசு, இனி என்ன வேலை எனக்கு, தேதி குறிப்பிடச் சொல்வோம், ஓ ஈழமே, முடியுமா?, என்ன தயக்கம், நமக்காக, பாவம் அந்த மனிதர்கள், புறப்படு, நாட்டினை வெல்லாமல் நாமிங்கு ஒடியோம், தமிழினமே ஆகிய 24 தலைப்புகளில் எழுதப்பட்ட எழுச்சிமிகு கவிதைகளாக இவை அமைந்துள்ளன. மன எழுச்சியோடுதான் கவிதை உதயமாகும் என்ற பிரபல கவிஞர் ஷெல்லியின் கூற்றினை போராடி அதன் மறுவினைத் தாங்கிய இரு போராளிக் கவிஞர்களின் கவிதைகள் மெய்படச் செய்கின்றன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 104110).