10591 நிழல் தேடும் கால்கள்: கவிதைகள்.

நிந்தவூர் ஷிப்லி. ஒலுவில்: தமிழ்ச் சங்கம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம், 32360 ஒலுவில், 1வது பதிப்பு, மார்ச் 2008. (அச்சக விபரம் தரப்படவில்லை).

72 பக்கம், ஓவியங்கள், விலை: ரூபா 120., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-99663-1-2.

நிந்தவூர் ஷிப்லி என்னும் F.H.A. ஷிப்லி ஈழத்தின் தென்கிழக்கு நிந்தவூரை சேர்ந்தவர். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பட்டப்படிப்பை நிறைவு செய்தவர். 2002 இல் ‘சொட்டும் மலர்கள்’ 2006இல் ‘விடியலின் விலாசம்’ 2008 இல் ‘நிழல் தேடும் கால்கள்’ ஆகிய நூல்களை வழங்கியவர். 2007 இல் இவர் மேற்கொண்ட ‘தேசிய ஒருமைப்பாட்டிற்கான அவசியம்’ என்ற ஆய்வு தேசிய சமாதான பேரவை மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தினால் சிறந்த ஆய்வுகளுள் ஒன்றாக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது. அண்மையில் இங்கிலாந்தின்  Bradford பல்கலைக் கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட முரண்பாட்டு முகாமைத்துவம் என்கிற பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்டார். போர் மற்றும் சமூகப் பிரச்சினைகளிலிருந்து எழுதப்படுகிற இவரின் கவிதைகள் இத்தொகுதியை அலங்கரித்துள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 45276).

ஏனைய பதிவுகள்