நெலோமி அன்ரனி குரூஸ். வவுனியா: நெலோமி அன்ரனி குரூஸ், தேசிய கல்வியியல் கல்லூரி, 1வது பதிப்பு, நவம்பர் 2011. (வவுனியா: ஜீ.எச்.அச்சகம், இல. 165, குருமன்காடு).
x, 102 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 19×12 சமீ.,ISBN: 978-955-99420-3-0.
சமகால நிகழ்வுகளின் பல்வேறு சம்பவங்களையும் தனது கவிதைகளுக்கூடாக வெளிப்படுத்துவதில் ஆசிரியர் வெற்றிகண்டுள்ளார். போரும் இழப்புகளும், சிறுவர் உரிமைகள், சமூகச் சீர்கேடுகள், மனித நடத்தைகள், காதல் என்பன அவரது கவிதைகளின் கருவாகின்றன. இக்கவிதைகள் மரபுசார்ந்த கவிதைகள், புதுக் கவிதைகள், இசைப் பாடல்கள் என மூவகையிலும் இவரது ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. ஒலிநயமும் சந்தச் சிறப்பும் பெற்று மிளிர்கின்றன. உன் பாதம் சரணம் என்பதில் தொடங்கி எங்கே பொகின்றாய் என்பது ஈறாக 35 கவிதைகளை எமக்கு இந்நூல்வழி வழங்கியிருக்கிறார்.