என்.நஜ்முல் ஹூசைன். கொழும்பு 15: ஸ்ரீ லங்கா இஸ்லாமிய கலை இலக்கிய மன்றம், 823, புளுமெண்டால் வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1992. (கொழும்பு 12: மின்னல் அச்சகம், 76/2, நியூ மூர் வீதி).
84 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ.
கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட என்.நஜ்முல் ஹூசைன், ஹமித் அல் ஹ}சைனி மகா வித்தியாலயத்தில் பயின்றவர். இவர் 1967இல் சுஜாதா என்ற கையெழுத்துச் சஞ்சிகையின் ஆசிரியராக எழுத்துத் துறையில் நுழைந்தவர். தமிழகத்தின் குமுதம் இதழில் இவரது முதல் ஆக்கம் 1968இல் அச்சில் வெளிவந்தது. தொடர்ந்து ஈழத்துப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இவரது படைப்புகள் வெளிவந்தன. விண்மீன், நஜ்மி, அபூ ஷப்னா போன்ற புனைபெயர்களில் இவரது சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என்பன வெளிவந்தன. இவரது முதலாவது கவிதைத்தொகுதி இதுவாகும்.