செ.மோகன்ராஜ். கொழும்பு 14: புரவலர் புத்தகப் பூங்கா, இல.25, அவ்வல் சாவியா வீதி, 1வது பதிப்பு, ஜுன் 2015. (கொழும்பு 11: எஸ்.என்.எம்.ஆர். கிராப்பிக்ஸ் ).
xiv, 62 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-42291-0-5.
மினிக்கவிதை, மணிக்கவிதை, மின்மினிக்கவிதை என 96 குறுங்கவிதைகளின் தொகுப்பு இது. நவீன தலைமுறையினர் மரபுக்கவிதைகளைவிட நவீன கவிதைகளை வாசிக்க பெரிதும் தூண்டப்பட்டுள்ள இன்றைய நிலையில் இந்நூல் எளிமையான தலைப்பகளுடன் குட்டிக் கவிதைகளாலும், மனதில் பதிந்து நிற்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கலைச்சிற்பன், சந்ரகாந், செல்லா, எம்.ராஜ் ஆகிய புனைபெயர்களில் அவ்வப்போது ஊடகங்களில் தன் கவிதைகளைக் கண்டவர் இவர். வலம்புரி கவிதாவட்டத்தில் வலம்வந்த இவர் ஈழத்தின் நாடகத்துறையிலும், திரை இசைப்பாடலிலும் தன் பங்கை வகித்தவர். சுமார் 60 மெல்லிசை, பக்திப்பாடல்களையும் இவர் எழுதியுள்ளார். இந்நூலில் இடம்பெற்றுள்ள ஓவியர்அருணின் (இராஜலிங்கம் புஷ்பராஜ்) சித்திரங்கள் கவிதைகளுக்கு மொருகூட்டுகின்றன. புரவலர் புத்தகப் பூங்காவின் 35ஆவது வெளியீடு இதுவாகும்.