யோகி சுத்தானந்த பாரதியார். நாவலப்பிட்டி: ஆத்மஜோதி நிலையம், பதிப்பு விபரம் தரப்படவில்லை. (நாவலப்பிட்டி: ஆத்மஜோதி அச்சகம்).
101 பக்கம். விலை: ரூபா 1.50, அளவு: 18×12 சமீ.
கவியோகி சுத்தானந்த பாரதியார் 11.5.1897 இல் தமிழகத்தில் சிவகங்கையில் வேங்கட சுப்பிரமணியன் என்ற இயற்பெயருடன் பிறந்தவர். தனது 92ஆவது அகவையில் 7.3.1990இல் சிவகங்கைக்கு அருகே சோழபுரத்தில் மறைந்தவர். கவிதைகள், தமிழிசைப் பாடல்கள், உரைநடை நூல்கள், மேடை நாடகங்கள் எனப் பல்வேறு இலக்கியங்களை தமிழுலகிற்கு வழங்கியவர். இந்தியாவில் மாத்திரமன்றி இலங்கையிலும் இவர் பெயர்பெற்றிருந்தவர். இவர் தொழிலாளர்களுக்காகப் பாடிய பாட்டாளிவர்க்கத்தின் எழுச்சிக்கான பாடல்களின் தொகுப்பு இதுவாகும். ஆத்மஜோதி நிலையத்தின் சுத்தானந்த மலர் தொடரில் மூன்றாவது நூலாக வெளிவந்துள்ளது. ஓங்காரம், எல்லோரும் வாருங்கள், பரம்பொருள் துதி, கணபதி வணக்கம், எனத் தொடங்கி துணிவுள்ள வீரர்கள் ஈறாக 82 பாடல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 122730).