10603 பாம்புகள் குளிக்கும் நதி.

பொத்துவில் அஸ்மின். பொத்துவில் 7: U.L.M.அஸ்மின், மத்திய வீதி, இணை வெளியீடு: United Arab Emirates: Flint Publications, Abi Dhabi,  1வது பதிப்பு, செப்டெம்பர் 2013. (தெகிவளை: ஏ.ஜே. பிரின்ட்ஸ், 44 ஸ்டேஷன்; வீதி).

144 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-97102-4-0.

கருத்துச் செறிவும் கற்பனை வளமும் நிறைந்த கவிதைத் தொகுதி. மரபுக்கவிதை வடிவிலும், இசைப்பாடல் வடிவிலும், புதுக்கவிதை வடிவிலும் இவர் யாத்த கவிதைகளின் தொகுப்பாக இது வெளிவந்துள்ளது. சுற்றுச் சூழல் விழிப்புணர்வுக்காக இவர் எழுதிய தண்ணீரை வாசிப்போம் கவிதை சிறப்பாக அமைந்துள்ளது. எதிர்காலத்தில் தண்ணீர்ப் பஞ்சத்தால் நேரவிருக்கும் அவலத்தையும் ஆபத்தையும் செறிவான வார்த்தைக் கோலங்களால் பதிவுசெய்திருக்கிறார். இளைஞர்களின் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும் நம்பிக்கை நாற்றை விதைக்கும் வகையிலும் இவரது கவிதைகள் அமைகின்றன. மொழியாற்றலைப் புலப்படுத்தும் வகையில் ஒன்று என்ற வார்த்தையை வைத்து ஒன்றுக்குப் பல அர்த்தங்கள் சொல்லும் ஒன்று சக ஒன்று சமன் ஒன்று என்ற கவிதை இவரது புலமைக்கும் புதுமைக்கும் சான்றாகின்றது. பொத்துவில் அஸ்மின் அல்லது யு. எல். எம். அஸ்மின் (பிறப்பு: மே 2, 1983) ஓர் ஈழத்துக் கவிஞர். இவர் மரபுக் கவிதை எழுதிவரும் கவிஞராகவும் திரைப்படப் பாடலாசிரியராகவும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் அறியப்பட்டு வருகின்றார். கவிதைத் துறையில் சனாதிபதி விருது (2001), அகஸ்தியர் விருது (2011), கலைமுத்து விருது (2011), கலைத்தீபம் விருது (2011) கவிவித்தகன்(2015) எனப் பத்துக்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றிருக்கும் இவர், சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை இரண்டு தடவைகள் (2010, 2011) பெற்றுள்ளார். செந்தூரம் என்ற செய்தித்தாள் இணைப்பிதழும் கவிஞன் என்ற இதழும் இவருடைய ஒளிப்படத்தை அட்டைப் படத்தில் இட்டுச் சிறப்பித்துள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 54397).

ஏனைய பதிவுகள்