10605 பாலைவனப் பனித்துளி: கவிதைத் தொகுதி.

க.கோகுலதாஸ். வவுனியா: கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், 1வது பதிப்பு, நவம்பர் 2001. (வவனியா: ஆதவன் அச்சகம்).

(4), 72 பக்கம், விலை: ரூபா 75., அளவு: 20×14 சமீ.

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவரான கோகுலதாஸின் (க.கோகுலதாஸ், ‘கோகுலம்’, இல. 157, திருநாவற்குளம், வவுனியா) முதலாவது கவிதைத் தொகுப்பு. வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தினரின் ஆறாவது வெளியீடு. அன்னை என்பதில் தொடங்கி பாலைவனப் பனித்துளி என்ற கவிதை ஈறாக 34 கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இவரது தமிழ்மொழி மீதான தீவிர அபிமானத்தை தமிழைத் தாயாக நேசி தாயைத் தமிழாக நேசி, தமிழ் பேசுங்கள் தமிழர்களே, தமிழை மறந்தவனுக்காய், வீழ்வது நீயாயினும் வாழ்வது தமிழாகட்டும் ஆகிய கவிதைகள் எடுத்துரைக்கின்றன. அவரது இளமைக்கு ஏற்ற காதல்ரசம் துள்ளும் கவிதைகளும் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்