10607 பாவாரப் பலகாரம்: கவிதையாக்கம்.

கிருஷ்ணபிள்ளை உதயகுமார். வவுனியா: கிருஷ்ணபிள்ளை உதயகுமார், ஆசிரிய ஆலோசகர், வவுனியா வலயக் கல்வி அலுவலகம், வவுனியா தெற்கு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2008. (வவுனியா: ஜெய்னிகா அச்சகம்).

viii, 56 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 29×20 சமீ.

வவுனியா தமிழ்ச் சங்கம், சண்முகலிங்கம் அரங்கம், வவனியா வலயக் கல்வி அலுவலகம் ஆகிய மூன்று அமைப்புகளுடன் இணைந்து கி.உதயகுமார் வெளியீடு செய்துள்ள அவரது பல்வேறு கவிதைகளின் தொகுப்பு இது. முல்லைத்தீவு வற்றாப்பளையை பிறப்பிடமாகக் கொண்ட பட்டதாரியான இவர், பல்வேறு அரங்குகளிலும், நிகழ்வுகளின்போதும் இயற்றி வழங்கிய சுவைமிகு கவிதைகள் இங்கு இடம்பெற்றுள்ளன. கவிச்சிகரம்  என்ற பட்டத்தைப் பெற்றுக்கொண்டபோது, திருமதி தயா குணரட்ணசிங்கத்தின் மகளின் திருமணத்தின்போது, திருமதி கி.சோமசுந்தரம் இளைப்பாறியபோது,  திருமதி அன்ரனி பற்றீசியா அவர்களின் பிரியாவிடை நிகழ்வின்போது, கல்விப்பணிப்பாளர் கனடா சென்ற வேளையில் என பல்வேறு சூழல்களில் இவர் எழுதிய கவிதைகளுடன், முல்லையூரான், கலவிப்பணிப்பாளர், ஆ.பொன்னையா என்ற பிரதிக் கல்விப்பணிப்பாளர், கணேசதாசன், திக்வெல்லைக் கமால், ஐ.இராசரட்ணம் போன்ற தனிநபர்களின் பேரில் பாடப்பெற்ற கவிதைகளும் ஆசிரியரே தெய்வப்பிறவியரே, கற்போம் கற்பிப்போம், ஆசிரியர் யார்?, விடியலை நோக்கி, மனப்பிணி களைய சில மருந்துகள் என முப்பதுக்கும் அதிகமான கவிதைகளை இந்நூல் கொண்டுள்ளது.

ஏனைய பதிவுகள்