வ.பிரபு. அளவெட்டி: யா/அளவெட்டி அருணாசலம் வித்தியாலயம், 1வது பதிப்பு, ஜுன் 2011. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(9), 55 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 17×12.5 சமீ.
வ.பிரபு, மாவிட்டபுரம், கலட்டி தெல்லிப்பழையில் பிறந்தவர். 2005ஆம் ஆண்டிலிருந்து கவிதைகளைப் படைத்து வருபவர். இவர். யாழ்/கந்தரோடை தமிழ் கந்தையா வித்தியாசாலையில் 2000ஆம் ஆண்டுவரை க.பொ.த. சாதாரண தரம் வரை படித்து, யாழ்/ஸ்கந்தவரோதயா கல்லூரியில் 2003ம் ஆண்டு வர்த்தகப் பிரிவில் உயர்கல்வியைப் பூர்த்தி செய்தார். இவரது முதல் கவிதைத் தொகுப்பு ‘பிரிவின் யதாரத்தங்கள்’ 2010இல் வெளிவந்தது. இது அவரது இரண்டாவது கவிதைத் தொகுதி. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 219364).