த.ஜெயசீலன். யாழ்ப்பாணம்: அருணன் பதிப்பகம், நல்லூர், 1வது பதிப்பு, கார்த்திகை 2014. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 15/2, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).
80 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-41870-0-9.
கவிஞர் த.ஜெயசீலனின் பிரார்த்தனைகள் என்ற கவிதை முதல் எம்மொழி போற்றுதும் என்ற கவிதை ஈறாக 59 கவிதைகள் அடங்கிய தொகுப்பு இது. இவரது கவிதைகள் பெரும்பாலும் மரபுக் கவிதைகளாக அமைந்துள்ளன. இக்கவிதைகள் சூழலின் சுக துக்கங்களை, இன்ப துன்பங்களை, வெற்றி தோல்விகளை வாசகனுடன் பகிர்ந்துகொள்கின்றன. சுயத்தின் தேடல், இயற்கை மீதான ஈர்ப்பு, போரின் பின்னரான அவலம், பிடிமானமற்ற காலத்தின் இயலாமை, மேலாண்மை குறித்த எள்ளல் போன்ற பல்வேறு பாடுபொருள்களைத் தன்னகத்தே கொண்ட கவிதைகளை இந்நூல் உள்ளடக்குகின்றது. எளிமையான மொழிநடை கவிதைகளுக்குக் கனதி சேர்க்கின்றன. இலங்கையில் 1990களில் இலக்கிய உலகில் நுழைந்து தடம்பதித்த த.ஜெயசீலன் கவிதைத்துறையில் நுழைந்து 22 ஆண்டுகளில் நூலுருவில் வெளிவரும் நான்காவது தொகுதி இதுவாகும்.