10616 புலி பாய்ந்தபோது இரவுகள் கோடையில் அலைந்தன.

மஜீத். சென்னை 600005: கருப்புப் பிரதிகள், பி. 74, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2008. (சென்னை -5: ஜோதி கிராப்பிக்ஸ்).

48 பக்கம், விலை: இந்திய ரூபா 35., அளவு: 18×12 சமீ.

ஈழத்து முஸ்லீம் கவிஞரான மஜித்தின் இந்த தொகுப்பு, சிங்களப் பேரினவாதம் மற்றும் தமிழ் ஆயுதக்குழுக்கள் ஆகியவற்றிற்கு இடையில் சீரழிக்கப்பட்ட முஸ்லீம்களின் வாழ்வை கவித்துவத்தோடு முன்வைக்கிறது. பொதுவாக படிமம் என்னும் உத்தி வழக்கொழிந்து நவீன கவிதை வேறொரு தளத்திற்கு நகர்ந்து விட்டது.  படிமம் என்பதைத் தாண்டியதாக கவிதையில் சித்திரங்களை வரைந்து காட்டும் அற்புதக் கலை மஜீத்திற்குக் கைகூடியிருக்கிறது. தனது பண்பாட்டுப் படிமங்களை சின்னஞ்சிறு கதைகளாகவும், சக மனிதர்களின் வாழ்வியலாகவும் எடுத்துரைக்கின்றார். சிங்கம், புலி, கோடைக்காலம், குளிர்காலம் என்னும் வெவ்வேறு குறியீடுகளின் வழியாக கவிதை நாடகத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் மஜீத். இவரது பல கவிதைகள் கவித்துவ துயரம் மிக்கவைகள். இவர் இலங்கை அக்கரைப்பற்றில் வாழ்ந்து வருபவர். இந்நூல் பற்றி மஜீத் கவிதைகள் என்ற தொகுப்பில் இவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ‘புலி பாய்ந்தபோது இரவுகள் கோடையில் அலைந்தன’ தொகுப்பு இனவாதம் பற்றிய கடும் சாடல்களை முன்வைத்தது. நான் நடுநிலையான எழுத்தையே எப்போதும் விரும்பினேன். விடுதலைப் புலிகளின் காத்தன்குடி படுகொலைகளுக்குப் பின்னர், அவர்களது நடவடிக்கைகளை சித்திரமாக வடித்ததன் விளைவே அந்தத் தொகுப்பு. வடக்கிற்கும் கிழக்கிற்கும் தொடர்பற்று இருந்த சூழலில் எனது தொகுப்பு வெளியாகும் முன்பே அதைப் படிக்காமல், வடக்கிலுள்ளஆயுதக் குழுக்கள் என்னை அச்சுறுத்தின.  துரோகிப் பட்டம் சூட்டின. முதலில் பிழையாக நினைத்தவர்கள், தொகுப்பைப் படித்பிறகு என்னிடம் மன்னிப்புக் கேட்டார்கள்.’ (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 47506).

ஏனைய பதிவுகள்

16098 நல்லைக்குமரன் மலர் 1996.

தெல்லியூர் செ.நடராசா (கௌரவ பதிப்பாசிரியர்), நல்லையா விஜயசுந்தரம் (உதவிப் பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 1996. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி). 114 +