இ.சு.முரளிதரன். யாழ்ப்பாணம்: மேதினிகா வெளியீடு, 34/03 செட்டித் தெரு, நல்லூர், 1வது பதிப்பு, ஐப்பசி 2008. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 15/2, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).
40 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 150., அளவு: 21.5×13.5 சமீ.
உச்சிக்கிழான் என்ற புனைபெயரிலும் பல கவிதைகளைத் தந்தவர் இவர். ஏகலைவன், அதாவது ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். பதினைந்து மரபுக் கவிதைகளையும், அதன் இருமடங்கான கவிநயம்சொட்டும் புகைப்படங்களையும் கொண்டு வெளிவந்துள்ளது இந்நூல். தமிழ், பக்தி, கவிதை, இனப்பற்று, நாட்டுப்பற்று, சுய லயிப்புகள் என்பன இவரது கவிதைகளின் பாடுபொருளாக விரிகின்றன. பெரும்பாலான கவிதைகள் வெண்பாவிலும் விருத்தத்திலும் அமைந்திருக்க மற்றவை அகவற்பாவிலும் குறும்பாவிலும் அமைந்துள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 48850).