தஸ்லிம் ஷியாத். பாலமுனை: கலாசார அபிவிருத்தி மையம், 1வது பதிப்பு, 2014. (அட்டாளைச்சேனை: கொலேஜ் நீட்ஸ்).
ix, 62 பக்கம், விலை: ரூபா 230., அளவு: 19.5×14 சமீ., ISBN: 978-955-97102-4-0.
அட்டாளைச்சேனையில் பிறந்து பாலமுனையில் வாழ்ந்துவரும் கவிஞர் தஸ்லிம் ஷியாத் எழுதிய கவிதைகளின் தொகுப்பு இது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தமிழ் (சிறப்பு) கலைப்பட்டதாரியான இவர் ஆசிரியராகப் பணியாற்றுகின்றார். 2000ம் ஆண்டு முதல் கவிதைகள் எழுதி வருகின்றார். பரீட்சை வழிகாட்டிகள், உசாத்துணை அறிவியல் நூல்கள் சிலவற்றை தொகுத்துப் பதிப்பித்துமுள்ளார். அட்டாளை நஷி என்ற புனைபெயரில் இவரும், எம்.ஏ.தாஜஹானும் இணைந்து 2006இல் வெளியிட்ட ‘ஒரு கூட்டில் இரு பறவைகள்’ என்ற முதலாவது கவிதைத் தொகுதியை அடுத்து வெளிவரும் இரண்டாவது தொகுதி இது. அன்பு மகன், அடையாள அட்டை, மூதூர் முகாமிலிருந்து கண்ணீர் கடிதம், புரிந்துகொள், நீ மலரவேண்டும், இருண்ட நாள் என இன்னோரன்ன 29 கவிதைகளை இத்தொகுப்பில் வழங்கியுள்ளார். (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 199615).