எஸ்.ஜலால்டீன். ஒலுவில் 4: செய்னம்பு ஹூசைமா வெளியீட்டகம், 123 ஏ, அல்-அஷ்ஹர் வித்தியாலய வீதி, 1வது பதிப்பு, மே 2013. (அக்கரைப்பற்று: நியூ செலெக்ஷன்).
123 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-44425-0-4.
கவிஞர் எஸ்.ஜலால்டீன், தான் வாழும் சூழலில் கண்டவற்றையெல்லாம் சுவைபட இனிய மரபுக் கவிதைகளில் தந்துள்ளார். நல்ல சொல்வளமும் ஒன்றுக்கொன்று பொருந்தும் எதுகை, மோனை அமைப்பும் அவரது கவிதைகளைச் சுவையும் பயனும் மிக்கதாக்குகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 234393).