எஸ்.எல்.எம்.ரிலா. அக்கரைப்பற்று 6: எஸ்.எல்.எம்.ரிலா, 59/1, எம்.எம்.எம்.வீ. வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2012. (கொழும்பு 12: ஹில் பிரெய்ன்).
(8), 56 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 12×18 சமீ., ISBN: 978-955-97102-4-0.
எஸ்.எல்.எம்.ரிலாவின் இக்கவிதைத் தொகுப்பில்; காதலின் மகரந்தப் பூக்கள் மணம் வீசுகின்றன. காதலும் காதல் சார்ந்த உணர்வுகளும் அழகியல் உணர்ச்சியுடன் இதில் அழுத்தமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. தென்றல் எப்.எம். வானொலி அறிவிப்பாளராகப் பணியாற்றும் கவிஞரின் புதுக்கவிதைகளின் தொகுப்பு இது. தினகரன் வார மஞ்சரி, வீரகேசரி, மெட்ரோ நியூஸ், மித்திரன், விடிவெள்ளி, வசந்தம் எப்.எம். ஆகிய ஊடகங்களில் இவரது கவிதைகள் முன்னர் வெளிவந்துள்ளன. அவற்றின் தேர்ந்த தொகுப்பாக இச்சிறு கையடக்க நூல் வெளிவந்துள்ளது.