10624 மகரந்தப் பூக்கள்.

எஸ்.எல்.எம்.ரிலா. அக்கரைப்பற்று 6: எஸ்.எல்.எம்.ரிலா, 59/1, எம்.எம்.எம்.வீ. வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2012. (கொழும்பு 12: ஹில் பிரெய்ன்).

(8), 56 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 12×18 சமீ., ISBN: 978-955-97102-4-0.

எஸ்.எல்.எம்.ரிலாவின் இக்கவிதைத் தொகுப்பில்; காதலின் மகரந்தப் பூக்கள் மணம் வீசுகின்றன. காதலும் காதல் சார்ந்த உணர்வுகளும் அழகியல் உணர்ச்சியுடன்  இதில் அழுத்தமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன.  தென்றல் எப்.எம். வானொலி அறிவிப்பாளராகப் பணியாற்றும் கவிஞரின் புதுக்கவிதைகளின் தொகுப்பு இது. தினகரன் வார மஞ்சரி, வீரகேசரி, மெட்ரோ நியூஸ், மித்திரன், விடிவெள்ளி, வசந்தம் எப்.எம். ஆகிய ஊடகங்களில் இவரது கவிதைகள் முன்னர் வெளிவந்துள்ளன. அவற்றின் தேர்ந்த தொகுப்பாக இச்சிறு கையடக்க நூல் வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

13908 பரம் பொருள்: பரநிருபசிங்கம் மாட்சி நயப்பு மலர்: 11.10.1987.

குடும்பத்தினர். யாழ்ப்பாணம்: சுந்தரம்பிள்ளை பரநிருபசிங்கம் நினைவுமலர்க் குழு, 102, செம்மணி வீதி, நாயன்மார்கட்டு, 1வது பதிப்பு, ஒக்டோபர், 1987. (யாழ்ப்பாணம்: அச்சக விபரம் தரப்படவில்லை). 30 பக்கம், புகைப்படத் தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

17216 இலத்தீன் அமெரிக்காவில் தேசிய இன முரண்பாடுகள்.

ஐங்கரன் விக்கினேஸ்வரா. பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஜுன் 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி). 100 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 500.,