இனியவன் இஸாறுதீன். (இயற்பெயர்: முஹம்மது அலியார் இஸாறுதீன்). அட்டாளைச்சேனை 10: எழுவான் வெளியீட்டகம், 33ஏ, கரையோர வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2009. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B புளுமென்டால் வீதி).
318 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 22×14 சமீ., ISBN: 978-955-1941-00-0.
அட்டாளைச்சேனையில் நவீன கவிதைப் பிரவேசம் பெற்ற புதியதலைமுறைக்கவிஞராக அடையாளம் காணப்பட்டவர் இனியவன் இஸாருதீன். 1980களில் அட்டாளைச்சேனையில் உருவான வாசகர்வட்டம், ‘நிலவிலே பேசுவோம்’ கலை, கலாசார, இலக்கிய மேடை நிகழ்ச்சியின் ஓரங்கமான ‘வளரும் பயிர்’ நிகழ்வில் அறிமுகமானவர். மழை வாழ்வின் தொடக்கம், நதி வாழ்வின் ஓட்டம், கடல் வாழ்வின் முழுமை என்று சொல்லும் இக்கவிஞர், தாய்-தந்தையருக்கும், தமிழாசிரியருக்கும், தன் மனைவிக்கும் உரிய கௌரவங்களைத் தமிழ்க்கவிதைகளினூடாக வழங்கி இயற்கையையும், மானுடத்தையும், வலிகளையும் பாடியிருக்கிறார்.