காவலூர் அகிலன் (இயற்பெயர்: கி.அகிலநாதன்). முல்லைத்தீவு: செல்லமுத்து வெளியீட்டகம், வள்ளுவர்புரம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2015. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172, மில் வீதி).
xiv, 48 பக்கம், படங்கள், விலை: ரூபா 180., அளவு: 24.5×17.5 சமீ., ISBN: 978-955-42715-0-0.
யாழ்ப்பாண மாவட்டத்தின் ஊர்காவற்றுறையில் பிறந்து கிளிநொச்சி, கனகாம்பிகைக் குளத்தில் வசிக்கும் இளம்கவிஞன் அகிலநாதனின் முதலாவது கவிதைத் தொகுதி இது. புகையிரதத் திணைக்களத்தில் பணியாற்றும் இவர், கிளிநொச்சி மத்திய கல்லூரி, கனகாம்பிகைக் குளம் அ.த.க. பாடசாலை என்பனவற்றின் பழைய மாணவர். துதிக்கிறேன், காலம் மாறிப் போச்சு, விழித்திரு பெண்ணே, அவன் வரவிற்காய், இடப்பெயர்வு, அகதி என்னும் அவலநிலை, பசி, காமுகரின் கொடூரம், ஈழத்துக் காவலர்கள், வறுமையின் வலிகளுடன், மீள்வரவின் நினைவுகள், ஈழத்து மீனவரின் சோகம், விதவை என அறியாமல், ஒரு கைதியின் தவிப்பு, மறந்திடாத மரணிப்பு, சரித்திரமாய் தமிழன் இருப்பான் என இன்னோரன்ன நாற்பது கவிதைத் தலைப்புகளின்கீழ் ஈழத்துத் தமிழ் மக்களின் வலிகளை இக்கவிதைகள் பதிவுசெய்கின்றன.