10630 முல்லைமணியின் கவிதைகள்.

முல்லைமணி (வே.சுப்பிரமணியம்). கொழும்பு 8: அருணா வெளியீட்டகம், A 15 1/1, மனிங்ரவுண் வீடமைப்புத் திட்டம், மங்கள வீதி, 1வது பதிப்பு, 2008. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B புளுமென்டால் வீதி).

xx, 105 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 17.5×12.5 சமீ., ISBN: 978-955-1347-05-5.

பண்டாரவன்னியன் என்ற தனது நூல் வெளியீட்டின்மூலம் நூல் வெளியீட்டுத்துறையில் நுழைந்த முல்லைமணியின் 16ஆவது நூல் இதுவாகும். கவிதை, கட்டுரை, இலக்கிய விளக்கம் முதலிய கலைப் புலங்கள் பலவற்றிலும் உலாவந்தவர் முல்லைமணி. இயற்கையாகவே கவிதை புனையும் ஆற்றல் மிக்கவர் என்று பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையினால் விதந்து போற்றப்பட்டவர். இக்கவிதைத் தொகுதியில் முல்லைமணியின் 49 கவிதைகள் அடங்குகின்றன. இடப்பெயர்வு, வன்னி நாடு. விவசாயம், கல்வி, தோத்திரப்பாடல்கள், முதலாளி தொழிலாளிகளின் நிலைமை, கும்மி, தெம்மாங்கு, விடுதலைப் போராட்டம் எனப் பல தளங்களில் உருவான கவிதைகள் இதில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Beste Kasino Spiele ferner Boni!

Content Nachfolgende Spiele bietet Ihnen das Ice Casino 🎰 Spiele & Spielesoftware in Inter city express Spielbank 🧊 Ein Cashback-Geschäft 🧊 Verantwortungsvolles Zum besten geben:

16223 ஓசோன் : உயிர்க் கோளத்தைக் காக்கும் வளிமண்டலப் படை.

 சாரதாஞ்சலி மனோகரன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு: வளிவளங்கள் முகாமைத்துவம் மற்றும் தேசிய ஓசோன் அலகு, சுற்றாடல் அமைச்சு, ‘சோபாதம்பியச”, இல. 416/c/1, றொபேர்ட் குணவர்த்தன மாவத்தை, பத்தரமுல்லை, 5ஆவது பதிப்பு, 2020, 1வது பதிப்பு, 2010.