அ.பேனாட். வவுனியா: வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், 1வது பதிப்பு, ஜனவரி 2008. (வவுனியா: சுதன் அச்சகம், கண்டி வீதி).
48 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20×14.5 சமீ.
சமூக உணர்வு, தமிழ் உணர்வு, காதல், மனிதம் எனப் பல பாடுபொருள்களில் உருவான கவிதை நூல். கவிஞர் தனது வாசிப்புத்திறத்தாலும், சிந்தனை விருத்தியினாலும் தனது சமூகப் பார்வையைப் பரப்பி சமூக உணர்வுகளையும், தன் மனதைப் பாதித்த சில விடயங்களையும், சம்பவங்களையும் மனதில் இருத்திக் கவிதைகளாக்கியுள்ளார். வன்னி மண்ணின் வாசனையுடனும் தமிழன் என்ற உணர்வுடனும்; கவிதைகள் நம்மில் கலக்கின்றன. ஆசிரியரின் இரண்டாவது கவிதைத் தொகுதியாகவும், வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தினரின் 16ஆவது பிரசுரமாகவும் வெளிவந்துள்ளது.