அமுத மொழியன். யாழ்ப்பாணம்: மணி ஓசை வெளியீடு, 12, சென். பற்றிக்ஸ் வீதி, 1வது பதிப்பு, பெப்ரவர் 1992. (யாழ்ப்பாணம்: மணி ஓசை அச்சகம், 12, சென். பற்றிக்ஸ் வீதி).
40 பக்கம், விலை: ரூபா 30., அளவு: 17.5×12.5 சமீ.
கருத்தாழமும் படைப்புவீச்சும் ஒருங்கமைந்தும், ஓசை-உணர்ச்சி சார்ந்தும் எழுகின்ற கவிதைகள் இவை. கவிஞரின் உள்ளக்கிளர்ச்சி தேசக் கட்டுமானத்தின் பல்வேறு அம்சங்களையும் உள்வாங்கிக்கொண்டதாக அமைகின்றது. யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவராகிய அமுதமொழியன் உடற்கூற்று மருத்துவ பரிசோதனைகளோடு மட்டும் நின்றுவிடாது, இக்கவிதைத் தொகுதியின் வாயிலாக சமூகத்தின் உளக்கூற்றுணர்வுகளையும் உள்வாங்கி இப்படைப்புகளை தந்துள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 155714).