தாமரைத் தீவான் (இயற்பெயர்: சோ.இராசேந்திரம்). லண்டன் E13 OJX: முல்லை அமுதன், 34, Redriffe Road, Plaistow, 1வது பதிப்பு, 2010. (சென்னை 600 005: மீரா ஆப்செட் பிரிண்டேர்ஸ்).
192 பக்கம், விலை: இந்திய ரூபா 105., அளவு: 21×14 சமீ.
மொழிமீதான பற்றும் தன் இனத்தின் மீதான வாஞ்சையும் கவிஞரின் கவிவரிகளில் நிறைந்துள்ளன. அன்றுதொட்டு அந்நியரின் அடக்குமுறைகளினாலும், காட்டிக்கொடுப்புக்களினாலும் தமிழும் தமிழரும் வீழ்ந்தது கண்டு துடிக்கின்ற மனதையும் கவிதைகளில் காணமுடிகின்றது. சமூகக் கட்டுப்பாடுகளை மீறாமல் அதேவேளை மூடநம்பிக்கைகளுக்குச் சாட்டையடி கொடுக்கும் கவிதைகளாகவும் இவை அமைந்துள்ளன. பழமைக்கும் புதுமைக்குமான மனிதச்சங்கிலியாக இக்கவிதைகள் அமைகின்றன.