கு.றஜீபன். சுன்னாகம்: குலசிங்கம் றஜீபன், வேலவளவு, ஏழாலை மேற்கு, 1வது பதிப்பு, 2000. (யாழ்ப்பாணம்: கங்கை ஓப்செற் பிறின்டேர்ஸ், பெருமாள் கோவிலடி, நாவலர் வீதி).
xxv, 80 பக்கம், புகைப்படம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.
இது ஆசிரியரின் முதலாவது கவிதை நூல். விடு தமிழே, சாடல்கள், தமிழா தமிழா, தேன் தமிழ், மெருகூட்ட வேண்டும், ஊசலாடும் உரிமைகள், நாங்கள் சபிக்கப்பட்டவர்கள், கல்லறைகள் காய்வதில்லை, ஏழையோ, மண்ணுக்குள் புதைந்த மனித வேர்கள், எங்கள் புதைகுழிகள், புதைக்கப்பட்ட செம்மணி ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 129265).