முத்து இராசரத்தினம். யாழ்ப்பாணம்: புலவர் முத்து இராசரத்தினம், எண். 54, சம்பியன் ஒழுங்கை, கொக்குவில் கிழக்கு, 1வது பதிப்பு, 2013. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிறின்டேர்ஸ், எண். 681, காங்கேசன்துறை வீதி).
(3), 90 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 750., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-41536-0-8.
‘என்று வரும்’ என்ற கவிதைத் தொகுப்பினை 1967இலும், ‘சிலந்தி வயல்’ என்ற சிறுகதைத் தொகுப்பினை 1976இலும் வெளியிட்டவர் புலவர் முத்து இராசரத்தினம். பழந்தமிழ் நூல்களை மிகஆழமாகக் கற்று அவற்றிலே காணப்படும் அரிய கருத்துக்களைத் தன் சிந்தனையிற்கொண்டு அவற்றை மிக எளிமையாகவும் கற்றோர்க்கும் மற்றோர்க்கும் களிபேருவகை அளிக்கக்கூடியதாக இந்நூலின் மரபுக்கவிதைகளின் வழியாக வெளிப்படுத்தியுள்ளார்.