மைதிலி தயாபரன். வவுனியா: கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், 1வது பதிப்பு, டிசம்பர் 2014. (வவுனியா: வாணி கணனிப் பதிப்பகம், இல. 85, கந்தசுவாமி கோவில் வீதி).
xvi, 94 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-41614-2-9.
மின்னியல் பொறியாளராகப் பணியாற்றும் மைதிலியின் விஞ்ஞானமும் மெஞ்ஞானமும் கலந்த கலவையாக அமைந்துள்ள இந்நூலில் 26 கவிதைகள் அடங்கியுள்ளன. பல்வேறு விஞ்ஞான விதிகள், உண்மைகள் என்பன நுலெங்கும் பரவிக்கிடக்கின்றன. அறிவுரையும் அறமும் உரைக்கின்ற புதுக்கவிதைகளாகப் புதுப் பொலிவுடன் இவை மிளிர்கின்றன. பல கவிதைகள் எளிமையானதாகவும் விஞ்ஞான உணமைகளை உரைப்பதாகவும் அமைந்துள்ளன.