10646 வைகறை நிலவு: அங்கையன் கவிதைகள்.

அங்கையன் (இயற்பெயர்: வை.அ.கயிலாசநாதன்). கொழும்பு 4: திருமதி இராஜலட்சுமி அம்மாள் கயிலாசநாதன், எச் 2/1, அரசாங்க தொடர்மாடி, 1வது பதிப்பு, மார்ச் 1977. (யாழ்ப்பாணம்: சக்தி அச்சகம், 253 1/1, ஸ்ரான்லி வீதி).

ix, 34 பக்கம், விலை: ரூபா 2.50, அளவு: 18×12.5 சமீ.

34 வயதுவரை மட்டுமே வாழ்ந்து மறைந்தாலும், இன்றளவில் தன் படைப்புக்களால்  இலக்கிய உலகில் நிலைத்திருக்கும் அமரர் அங்கையன் கயிலாசநாதனின் கவிதைகளின் உள்ளடக்கமாகக் காதலும் குடும்ப வாழ்க்கையும் குழந்தைப்பேறும் கலையின்ப நுகர்வும் திகழ்கின்றன. சமுதாயச் சச்சரவுகள் நீங்கி அமைதி பிறத்தல் வேண்டும் என்ற பொதுப்படையான நல்லெண்ணமும் இக்கவிதைகளில் உண்டு. இறைவணக்கம் (2 கவிதைகள்), காதல் (11 கவிதைகள்), குழந்தை (3 கவிதைகள்), சமூகம் (5 கவிதைகள்), பொது (2 கவிதைகள்) ஆகிய தலைப்புகளில் பிரித்துத் தரப்பட்டுள்ள 23 கவிதைகளை இந்நூல் உள்ளடக்குகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 77212).     

ஏனைய பதிவுகள்

Mega Joker Slot

Content Które to Znajdują się Popularne Gry Jackpot? Które Są Rodzaje Jackpotów W całej Kasynie Przez internet? Internetowe Kasyno Pochodzące z Licencją W sytuacji darmowych

Assortment C

Content Giving an answer to An extension Bet As the Small Blind #1: Steal More often Regarding the Short Blind Gto Solver Analogy #step 1