குழந்தை ம.சண்முகலிங்கம். யாழ்ப்பாணம்: கூத்தரங்கம்- செயல்திறன் அரங்க இயக்கம், 1வது பதிப்பு, ஜுன் 2008. (கோண்டாவில்: அன்ரா டிஜிட்டல் இமேஜ், உப்புமடச் சந்தி, காங்கேசன்துறை வீதி).
56 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21×14 சமீ.
பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு தாயகத்தில் தனித்திருக்கும் பெற்றோர் பற்றியதொரு பார்வையே இந்நாடகத்தின் கருவாகும். ஈழத்தின் தமிழ் அரங்கியல் வரலாற்றில் ஆங்காங்கே குறிப்பிடக்கூடிய திருப்புமுனைகளாக அமைந்த நாடகங்கள் சிலவுண்டு. அவ்வகையில் நாடகம் பேசிய பொருள், நாடகத்தின் வடிவம், நாடகத்தின் பாணி, நாடகம் நிகழ்ந்த வெளி ஆகிய நான்கு காரணங்களால் ஈழத்துத் தமிழ் அரங்கியல் வரலாற்றில் குறிப்பிடக்கூடியதொரு நாடகமாகவும், பயில்வதற்குகந்த நாடகமாகவும் ‘எந்தையும் தாயும்’ கருதப்படுகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 53386).