கலைச்செல்வன். கொழும்பு 2: இலக்கிய முற்றம், E/G/02, ஸ்டுவர்ட் வீதி தொடர்மாடி, விதானகே மாவத்தை, 1வது பதிப்பு, டிசம்பர் 2014. (கொழும்பு 12: பேர்பெக்ட் பிரின்டர்ஸ், டயஸ் பிளேஸ்).
xvi, 88 பக்கம், புகைப்படங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 350., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955- 7691-00-8.
தமிழ் நாடக அரங்கின் அகத்தையும் முகத்தையும் மாற்றும் அரங்க அளிக்கைகள் என்ற பதாதையுடன் வெளிவந்துள்ள குறுநாடகங்கள் ஏழின் தொகுப்பே இந்நூலாகும். ‘கலைஞர் கலைச்செல்வனின் குறுநாடகங்கள்’ என்ற மேலட்டைத் தலைப்புடன் வெளியிடப்பட்டுள்ளது. தீர்க்கசுமங்கலி (புராணத்திலிருந்து), ஒரு மனிதன் ஒரு வழக்கு இரு தீர்ப்பு (சட்டத்திலிருந்து), வெள்ளிக்காசுகள் (இதிகாசத்திலிருந்து), நீ இல்லாத நான் (உணர்வுகளிலிருந்து), ஏரோது மன்னன் (வரலாற்றிலிருந்து), தண்ணீருக்கும் தாகம் (அயற்புறத்திலிருந்து), யுத்தம் வேண்டாம் (அழிவுகளிலிருந்து) ஆகிய ஏழு குறுநாடகங்கள் இதில் இடம்பெறுகின்றன. யுத்தம் வேண்டாம் என்ற நாவலில் யுத்தததின் கோர முகத்தையும், தண்ணீருக்கும் தாகம் என்ற நாடகத்தில் வித்தியாசமான காதலையும், தீர்க்கசுமங்கலி நாடகத்தில் சத்தியவான்-சாவித்திரி காதல், அன்புப் போராட்டம் போன்றவற்றையும் கலைஞர் கலைச்செல்வன் சிறப்பாக எடுத்துக்காட்டுகின்றார்.