கந்தையா ஸ்ரீகந்தவேள். வவுனியா: சண்முகலிங்கம் கல்வியியல் அரங்கு, 1வது பதிப்பு, கார்த்திகை 2011. (வவுனியா: மல்ரிவிஷன் அச்சுக்கலையகம், இல.77, முதலாம் குறுக்குத்தெரு).
100 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-51050-2-6.
கருவறையில் இருந்து, பாடுகளின் பாதையில், மண்ணில் நல்லவண்ணம், நல்லக விளக்கு, உயிர்ப்பு ஆகிய ஐந்து நாடகங்களின் தொகுப்பே இந்நூலாகும். நாடகங்கள் யாவற்றிலும் மேடைத் தயாரிப்புக் குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நாடகங்கள் சமகாலத்துச் சமூகம் சார்ந்தவையாக உள்ளன. சுனாமிக் கொடுமை, கல்வியின் முக்கியத்துவம், தன்னம்பிக்கையின் அவசியம், விவசாயிகள், மீன்பிடிப்போர் முதலானோரின் ஜீவனோபாயத் தொழிற் பிரச்சினை, யுத்தக் கொடுமையினால் ஏற்பட்ட அவலம், இழப்பு, துன்பம், துயரம் எனப் பல பிரச்சினைகளை இவரது இந்த ஐந்து நாடகங்களும் சிறப்பாகப் புலப்படுத்துகின்றன.