10651 கனடாவில் எம்மவர்கள்: மூன்று நாடகங்களின் தொகுப்பு.

துறையூரான் (இயற்பெயர்: சின்னையா சிவநேசன்). யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, வைகாசி 2010. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F-L, 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

88 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 22×15 சமீ.

மனமாற்றம், வேர்களும் விழுதுகளும், கனடாவில் காமாசாஸ்திரி ஆகிய மூன்று நாடகங்களின் தொகுப்பு இது. மனமாற்றம் என்ற முதலாவது நாடகத்தில் இருவேறு புலங்களில் நிகழும் ஒரு கதையை மூன்று காட்சிகளில் ஐந்து பாத்திரங்களின் ஊடாக படம்பிடிக்கின்றார். கனடாவின் வாழ்க்கை முறையினை இப்பாத்திரங்களினூடாகப் பேசவைக்கிறார். வேர்களும் விழுதுகளும் நாடகத்தில் தலைமுறை மாற்றத்தை அருமையாக விளக்குகின்றார். புலம்பெயர் வாழ்வியலில் குடும்பங்களிடையே நிகழும் பனிப்புயல்களை உரையாடல் மூலம் விளக்கியிருக்கிறார். இறுதி நாடகமான கனடாவில் காமா சாஸ்திரி ஒரு நகைச்சுவை நாடகமாகும். இந்திய இலங்கைத் தமிழில் அமைந்த உரையாடல்களை நகைச்சுவையுடன் ஆசிரியர் இந்நாடகத்தில் புகுத்தியிருக்கிறார்.  (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 54585).

ஏனைய பதிவுகள்