மயில்வாகனம் இரகுநாதன் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: கலாநிதி மயில்வாகனம் இரகுநாதன், சிரேஷ்ட விரிவுரையாளர், தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, மார்ச் 2006. (யாழ்ப்பாணம்: எஸ்.எஸ்.ஆர். பிரின்டர்ஸ், 288 B, பலாலி வீதி).
xxiv, 228 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ.
சிலப்பதிகாரக் காப்பியத்தின் கிராமிய நாட்டுக்கூத்து வடிவமாக வன்னிப்பரப்பில், குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள முள்ளியவளைக் கிராமத்தில் நீண்டகாலமாக ஆடப்பெற்று வந்த கோவலன் கூத்து என்ற நாட்டுக்கூத்து வடிவத்தை கோவலன் நாடகம் என்ற பெயரில் கையெழுத்துப் பிரதிகளையும் வாய்மொழிப் பாடல்களையும் துணைகொண்டு அவற்றைத் தேடிப்பெற்றுப் பதிப்பித்திருக்கிறார். வாய்மொழி வழக்கிலிருந்துவந்த இக்கூத்தினை அரங்கத்தேவை கருதி அவ்வப்போது கையெழுத்துப் பிரதிகளாகவும் வைத்திருக்கிறார்கள். அப்பிரதிகளின் துணைகொண்டும் தற்போது இப்பணியில் ஈடுபட்டுவரும் அண்ணாவிமார்கள், மற்றும் மூத்த கலைஞர்களின் உரையாடல்களின் மூலமும் ஆசிரியர் தன் கலைமாணி சிறப்புப் பட்டத்தேர்வுக்கான ஆய்வாக வன்னிப்பிரதேசத்தில் கோவலன் கூத்து (1984) என்ற தலைப்பில் இவ்விலக்கிய வடிவத்தை ஆராய்ந்திருந்தார். தன் ஆராய்ச்சி அனுபவங்களின் வெளிப்பாடாக இந்நூல் அமைந்துள்ளது. தன் ஆய்வுப் பெறுபேறுகள் பற்றி முன்னுரையில் ஆசிரியர் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 47707).