ஏ.ஆர்.திருச்செந்தூரன். கொழும்பு: சுமதி பதிப்பகம், 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xii, 242 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-7557-00-7.
சூரியன் எப்.எம். வானொலியின் முன்னாள் அறிவிப்பாளர் திருச்செந்தூரன் எழுதிய 13 வானொலி மேடை நாடகங்களின் தொகுப்பு. 11 வானொலி நாடகங்களும், 2 மேடை நாடகங்களும் இதில் அடங்கியுள்ளன. இவற்றுள் 3 சமூக நாடகங்கள், 3 திகில் நாடகங்கள், 2 காதல் நாடகங்கள், 2 பெண்ணியச் சிந்தனை நாடகங்கள், இவற்றோடு மர்மம், சரித்திரம், நகைச்சுவை நிறைந்த நாடகங்களும் அடங்கியுள்ளன. சகல வயதினருக்கும் ஏற்ற பொழுதுபோக்கு அம்சங்கள் அடங்கிய நாடகங்கள் இவை. கஜனின்ற பாவப்பிள்ளை(சமூகம்/அரசியல்), திருமதி ஸப்தமி அருட்செல்வன் (சமூகம்), அகல்யாவின் ஆவி (திகில்), மாவீரன் செண்பகப் பெருமாள் (வரலாறு), மின்னல் (சமூகம்/காதல்), மலர்விழி மருத்துவமனை (திகில்), பாதை (சமூகம்/அரசியல்), வணக்கம் நேய நெஞ்சங்களே (சமூகம்/நகைச்சுவை), வெள்ளைநிற வானவில் (சமூகம்/பெண்ணியம்), இதுவும் சஸ்பென்ஸ் (மர்மம்), உனக்கென இருப்பேன் (சமூகம்/காதல்), பாபுவும் அம்மாவும் (திகில்), எங்கள் இரவுகள் விடியவில்லை (சமூகம்/பெண்ணியம்) ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. நூலாசிரியர், கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் நிர்வாகப் பொறுப்பு வகிக்கும் பிரமுகரான திரு ரகுபதி பாலஸ்ரீதரனின் மகனாவார்.