கந்தையா ஸ்ரீகந்தவேள். வவுனியா: சண்முகலிங்கம்; கல்வியியல் அரங்கு, 1வது பதிப்பு, ஜுன் 2008. (வவுனியா: மல்ரிவிஷன் அச்சுக்கலையகம், இல.77, முதலாம் குறுக்குத்தெரு).
xxvi, 82 பக்கம், விலை: ரூபா 290., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-51050-0-2.
மீட்டும் நினைவுகள், கற்பூர தீபம், கானல்வரி, எதிர்பார்ப்புகள் நிஜம்தானா, தேரார் வீதியில் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட ஐந்து நாடகங்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. முதல் நான்கு நாடகங்களும் பாடசாலைகளுக்காக எழுதப்பட்டவை. தேரார் வீதியில் என்ற நாடகம் நாடகத் தயாரிப்புக்கான சான்றிதழ்க் கற்கைநெறிப் பரீட்சைக்காக எழுதப்பட்டது. மீட்டும் நினைவுகள் என்ற நாடகம், வறுமை நிலையில் உள்ள சிறுமி ஒருத்தி புலமைப்பரிசில் பெற்று நகர்ப்புறப் பாடசாலைக்குச் சென்றபோது எற்படும் மனப்பாதிப்பு, அதனை மீட்கும் வழி என்பனவற்றைப் பற்றிப் பேசுகின்றது. கற்பூரதீபத்தில் ஒரு பாடசாலை அதிபர் தனது ஓய்வூதியத்தைப் பெறமுடியாது திண்டாடும் நிலையும், அதன் பின்னணியில் இடம்பெறும் பல வாழ்வியல் துன்பங்களின் பின்னர் ஓய்வூதியம் பெறுதலும் காட்சிப்படுத்தப்படுகின்றன. கானல்வரி-நாடகம், சிலப்பதிகாரத்தில் வரும் கோவலன்-மாதவி பிரிவின் அவலத்தை இலக்கியச் சுவையுடன் வழங்குகின்றது. எதிர்பார்ப்புக்கள் நிஜம்தானா? என்ற நாடகம் வெளிநாட்டு மாப்பிள்ளையைக் கரம்பிடித்து கொழும்பில் வாழும் ஒரு இளம்பெணணின் அவலத்தைச் சொல்கின்றது. தேரார் வீதியில் என்ற நாடகம், அரசியல் சார்ந்தது. நாடக அமைப்பிலும் ஆற்றுகை மோடியிலும் முன்னையவற்றைவிட வேறுபட்டது. நூலாசிரியர் வவுனியா விபுலாநந்தாக் கல்லூரியின் ஆசிரியராகப் பணியாற்றிய வேளையில் வெளியிடப்பட்ட நூல் இதுவாகும்.