நா.சுந்தரலிங்கம் (மூலம்), அம்மன்கிளி முருகதாஸ், கயிலைநாதன் திலகநாதன் (பதிப்பாசிரியர்கள்). வல்வெட்டித்துறை: ஜனனி வெளியீட்டகம், புதுவளவு, பொலிகண்டி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2007. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
56 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21×14.5 சமீ.
இலங்கையின் நாடக ஆளுமைகளில் குறிப்பிடத்தக்க இடம் வகித்தவர் அமரர் நா.சுந்தரலிங்கம். அவர் ஒரு நடிகர், நெறியாளர், நாடக எழுத்தாளர். அவரது அபசுரம் என்ற இந்த நாடகம் ‘நாடகம் நான்கு’ என்ற தொகுதியில் 1980இல் நடிகர் ஒன்றியத்தால் வெளியிடப்பட்டது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 493). அதன் பின்னர் இந்நாடகம் மீள்பதிப்புச் செய்யப்படவில்லை. நாடகத்தின் சிறப்பான தன்மையையும் வேறுபட்ட அளிக்கை முறையையும் கருத்திற்கொண்டு க.பொ.த. உயர்வகுப்புக்கு ஒரு பாடமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர்தர மாணவர்களின் பயன்பாட்டுக்காக இந்நாடகம் தனியான நூலாக வெளியிடப்பட்டுள்ளது.