உடுவை எஸ்.தில்லைநடராஜா. கொழும்பு: உடுவை எஸ்.தில்லைநடராஜா, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
vi, 30 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 70., அளவு: 21.5×14.5 சமீ.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ‘ஈழநாடு’ பத்திரிகையின் 10ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடாத்திய ஓரங்க நாடகப் போட்டியில் பரிசில் பெற்று 1971இல் ‘ஈழநாடு’ வெளியீடான நூலில் இடம்பெற்று, 1978இல் இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்டு, 1995இல் ரூபவாஹினியில் ஒளிபரப்பான ஓரங்க நாடகம் இதுவாகும். கொழும்பில், வீட்டின் ஒரு பகுதியை அடைத்து ‘அனெக்ஸ்’ என்ற இணைப்பு வீட்டில் வாழும் ஒரு குடும்பத்தில் விடுமுறை நாளொன்றில் காலை ஆறு மணிமுதல் ஆரம்பமாகும் நிகழ்ச்சிகளின் தொகுப்பே இந்த நாடகமாகும். குறைந்த வசதிகளுக்கும் நிறைந்த பிரச்சினைகளுக்கும் மத்தியில் கொழும்பில்தான் வாழ்ந்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்திலிருக்கும்; கதாபாத்திரங்களே இந்நாடகத்தில் வலம்வருகின்றனர்.