கலைச்செல்வன். கொழும்பு 6: இலக்கிய முற்றம், இல.6, பெட்ரிக்கா வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2010. (கொழும்பு 13: டிசைன் லாப், 190, ஜோர்ஜ் ஆர்.டி.சில்வா மாவத்தை).
xvi, 69 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 300., அளவு: 22.5×15 சமீ., ISBN: 978-955-51803-2-0.
1969இல் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் தினகரன் தமிழ் நாடக விழா- நாடகப் போட்டியில் பங்கேற்று இலங்கைத் தேசிய கலாநிலையத்தினர் மேடையேற்றிய நாடகமே மனித தர்மம். பிரதியாக்கம், இயக்கம் என்பவற்றை கலைச்செல்வன் மேற்கொண்டிருந்தார். பேராசிரியர் சு.வித்தியானந்தன், கா.சிவத்தம்பி, எஸ்.தில்லைநாதன், எஸ்.எம்.கமால்தீன், எஸ்.கணேசராஜா ஆகியோர் நடுவராகவிருந்து இந்நாடகத்திற்கு ஆறு விருதுகளை வழங்கினார்கள். சமுதாயத்தின் இருவேறு மதங்களுக்கிடையில் உள்ள மனிதர்களின் ஊடாட்டத்தை இந்நாடகக் கதாபாத்திரங்களுக்கூடாக மனித தர்மம் முன்வைக்கின்றது.