சொக்கன் (இயற்பெயர்: க.சொக்கலிங்கம்). தெல்லிப்பழை: மாவைக் கந்தசுவாமி தேவஸ்தானம், மாவிட்டபுரம், 1வது பதிப்பு, ஜுன் 1990. (நல்லூர்: திருவள்ளுவர் அச்சகம், யாழ்ப்பாணம்: ஸ்ரீசுப்பிரமணிய அச்சகம்).
xxiv, 66 பக்கம், விலை: ரூபா 30., அளவு: 21.5×14 சமீ.
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலை நிறுவிய மாருதப்பிரவல்லி (திசையுக்கிர சோழனின் புதல்வி) என்ற இளவரசி, குதிரைமுகம் (சாபத்தினால்) அடைந்து அதனின்றும் நீங்குவதும், தான் காதலித்த ஈழத்து மன்னன் உக்கிரசிங்கனை மணப்பதுமாகிய வரலாற்றினை இந்த நாடகம் விபரிக்கின்றது. மயிலங்கூடலூர் P.நடராசனின் ‘ஈழத்தமிழர் வரலாற்றுக் கதைகளைப் பயன்கொள்ளல்’ என்ற தலைப்பிலான ஆய்வுக்கட்டுரையும் இணைக்கப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 80416).